search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவதி அம்மன்"

    • பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிகார பூஜை
    • விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிச னம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரக ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சந்திர கிரகணத்தை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்பட்டது.

    அதன்பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படவில்லை. அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தி னுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

    சந்திர கிரகணத்தினால் பகவதி அம்மன் கோவில் நடை 9 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு அம்மனுக்கு பரிகாரபூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பிறகு பகவதி அம்மனுக்கு வழக்கம்போல் உள்ள பூஜைகள் தொடர்ந்து நடத்தப் பட்டது. கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிச னத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

    இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகா னந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தான கோவிலில் சந்திர கிரகணத்தை யொட்டி மாலை 6 மணி முதல் நடை அடைக்கப்பட்டது. இந்த கோவிலில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நாளைஅதிகாலை பரிகார பூஜைகள் நடத்திய பிறகு திறக்கப்படும்
    • இன்று சந்திரகிரகணம் நடப்பதையொட்டி நடை அடைப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தின மும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படும். அதன்படி சூரிய கிரக ணத்தையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டா ர்கள். அதன்பி ன்னர் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப் பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது.

    அதன் பிறகு பக்தர்கள் தரி சனத்தி ற்கு அனுமதிக்கப்ப டுவார்கள். இந்த தகவலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு
    • தினமும் இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கோவிலில் தொன்றுதொட்டு இரவு கோவில் நடை அடைக்கும் போது நடந்து வருகிற பூஜை ஆகும். இந்த பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். நேற்று இரவு நடந்த அத்தாழ பூஜையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். அவருடன் இந்த பூஜையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப் பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீ பத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதி யின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையி னர், இந்து சமய அ ணறநிலை யத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்கு மார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை மறு நாள் நடக்கிறது
    • நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் ஆன்மீக அருள் உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி களும் இரவில் வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கி றது.

    இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10-30மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்ட பத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலிக் கும்நிகழ்ச்சி நடக்கிறது.அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து மகா தானபுரம் நோக்கி அம்ம னின் பரிவேட்டை ஊர்வ லம் தொடங்குகிறது.

    இந்த ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை செல்கிறது. அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து செல்கிறார்கள். மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கேரளப் புகழ் தையம் ஆட்டம், பஞ்ச வாத்தியம், கயிலை வாத்தி யம், நாதஸ்வரம், பஜனை, சிங்காரிமேளம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், சிலம்பாட்டம் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் தெய்வங்களின் வேடம் அணிந்த மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப் படும் அம்மனின் பரி வேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலையசந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அளிக் கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதிஅம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவா மிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்க புரம் பகுதிக்கு செல்கிறது. வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடு கிறார்கள்.

    பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.அங்குவைத்து அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும்அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழி யாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோ வில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரி வேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக 500-க் கும்மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பரிவேட்டை திரு விழாவையொட்டி கன்னியா குமரியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாகர்கோ வில், கொட்டாரம், அஞ்சு கிராமம், கன்னியா குமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திரு விழா நடக்கும் மகாதான புரத்துக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ் தீஸ்வரம், கொட்டா ரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 7-ம் திருவிழாவான நேற்று இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாக னத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

    அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜை யும் ஏகாந்த தீபாராதனை யும் நடந்தது.

    8-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பொதுப் பணித்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரையும்நடக்கிறது. இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி யும் நடக்கிறது.

    • ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
    • வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக உரையும், இரவு பரதநாட்டி யமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன் சென்றது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பி ரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக்காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தள வாய்சுந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்பு
    • நவராத்திரி 4-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று மாலையில் ஆன்மீக உரையும், இரவு பக்தி இன்னிசை கச்சரியும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

    அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன், சாமிதோப்பு குருசிவச்சந்தி ரன், அகஸ்தீஸ்வரம் ஒருங்கி ணைந்த ஒன்றிய பா.ஜ.க. பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வை குண்ட பெருமாள், கொட்டா ரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி உள்பட திரளான பக்தர்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி யும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது. 5-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்ம னுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராத னையும், தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்கா வலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர் களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார்
    • காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    4-ம் திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், களபம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 1000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

    இதனை காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சுரேஷ், கன்னியாகுமரி பார்க்வியூ பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 2-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாள் திருவிழா நேற்று வணிக வரித்துறை சார்பில் நடந்தது.

    இதையொட்டி நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. இரவு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 3-ம்திருவிழாவான இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக அருள் உரையும் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 1-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று தொடங்கியது. 1-ம் திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும், தொடர்ந்து ஆன்மீக அருள் உரையும் நடந்தது. இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி நடந்தது.

    பின்னர் 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக் கப்பட்ட யானை முன்சென்றது. நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் கெங்கா ஜூவல்லர்ஸ் அதிபர்கள் பகவதியப்பன், கெங்காதரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, வணிகவரி மற்றும் விற்பனை ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    2-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு ஆன்மீக அருளுரையும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 8 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் தியாக சவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்து உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி தனது தோளில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலுமண்டபத்துக்கு எடுத்துச்சென்றார். அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர்.

    அதன்பிறகு கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அந்த கொலுமண்டபத்தில் ஏராளமான கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு அலங்கரித்து வைத்திருந்த கொலுவையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 10 நாட்களும் காலை 10 மணிக்கு நடக்கும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து காசி விஸ்வநாதர் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு கோவில் முன்பு நிறுத்தி வைத்திருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது லெள்ளிக்குடத்தில் புனித நீர் வைத்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு முன்னிலையில். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்குரதவீதி, நடுத்தெரு, தெற்குரதவீதி, சன்னதிதெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    ×